வீட்ல விசேஷம் திரைப்பட விமர்சனம் | Veetla Vishesham Movie Review & Rating

0
Veetla Vishesham Movie Review & Rating
Veetla Vishesham Movie Review & Rating

வீட்ல விசேஷம் திரைப்பட விமர்சனம் | Veetla Vishesham Movie Review & Rating

படக்குழு: 

நடிகர்கள்: RJ பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் மற்றும் பலர்.

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார்

எடிட்டிங்: செல்வா RK

தயாரிப்பு: போனி கபூர்

இயக்கம்: RJ பாலாஜி, N.J.சரவணன்.

Veetla Vishesham Movie Review & Rating
Veetla Vishesham Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

கதையே சற்று ஏடாகுடமானது தான். தனது மகனுக்கே(RJ பாலாஜி) கல்யாணம் வயசு இருக்கும் நேரத்தில், மீண்டும் கர்ப்பமாகும் தாய் (ஊர்வசி). இந்த செய்தி இன்றைய சமூகத்தில் பாலாஜியை எப்படி கேலி செய்கிறது, இதற்கு பாலாஜியின் பதில் என்ன? என்பதே கதைச்சுருக்கம்.

Veetla Vishesham Movie Review & Rating
Veetla Vishesham Movie Review & Rating

FC விமர்சனம்:

கடந்த 2018ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த வீட்ல விசேஷம். படம் எப்படி என விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை RJ பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ் மூவருமே போட்டிபோட்டு நடித்துள்ளனர். அதிலும் இந்த ஊர்வசி-சத்யராஜ் ஜோடி அருமை. நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளியும் கொடுத்த பாத்திரத்தில் நிறைவாக செய்துள்ளார்.

👉 நயன்தாராவின் ‘ஓ2 (O2)’ திரைப்பட விமர்சனம்  

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாகவும், கலர்புல்லாகவும் நமக்கு விருந்தளிக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை குறையில்லை. கதையாக பார்த்தால் முன்பு கூறியது போல் ஏடாகுடமான கதைதான், எத்தனை பேர் எளிதாக எடுத்துக்கொள்வார்கள் என தெரியாது. ஆனால், இப்படிப்பட்ட வித்தியாசமான கதையையும்ஒரு இடத்தில் கூட நம்மை முகம் சுளிக்க வைக்காமல் படமாக்கியுள்ளனர். இதற்கே படக்குழுவிற்கு பெரிய பாராட்டுக்கள்.

Veetla Vishesham Movie Review & Rating
Veetla Vishesham Movie Review & Rating

மருத்துவமனையில் நடக்கும் காமெடியாகட்டும், தனது அம்மா கர்ப்பமானது தெரிந்தவுடன் நடக்கும் விஷயங்கள் ஆகட்டும் படமுழுக்க காமெடி ஒர்க்கவுட் ஆகியுள்ளது. படத்தின் குறியாக தெரிவது, படத்தின் முதல் பாதி எந்தவித சலிப்பும் இல்லாமல் போக, இரண்டாம் பாதி ஏதோ சீரியல் தான் பார்க்கிறோமோ? என்கிற கேள்வி தான் நமக்குள் எழுகிறது. அந்தளவிற்கு எமோஷனல் காட்சிகளை இவர்கள் ஸ்டேஜிங் செய்த விதம் அமைந்துள்ளது. மேலும், சமீப காலமாக நாம் வெறுக்கும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகளை ‘கிரிஞ்’ என விமர்சனம் செய்வதுண்டு. சமீபத்தில் கூட டான் படத்தின் பல காட்சிகளை இப்படி விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாதியும் எத்தனை பேர் உணர்வு ரீதியாக ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை. கிரிஞ் லிஸ்டில் சேர்ந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இறுதியாக படம் எப்படி என்றால், காமெடி, எமோஷனல் என குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இப்படம் அமைந்துள்ளது. (ஒரு முறை பார்க்கலாம், ஓகே ரகம்தான்…)

Veetla Vishesham Movie Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்