‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்: நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.
வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமேடுத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் யார் வெளியிட போவது என்கிற கேள்வி? ரசிகர்கள் மற்றும் டிரேடிங் வட்டாரங்கள் மத்தியில் நிலவி வந்தது.

தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கள் உரிமையை ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் லலித் குமார்(7 screen studio) கைப்பற்றியுள்ளார். மேலும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் விஜய் அடுத்து நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE