ரிலீஸிற்கு முன்பே இத்தனை கோடியா? கெத்து காட்டும் வாரிசு: நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஃபேமிலி டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் வரும் பொங்கல் தின சிறப்பாக வெளியாகவுள்ள இப்படத்தின் பிசினஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, வாரிசு படத்தின் டிஜிட்டல் OTT உரிமையை ரூ.60 கோடிக்கு அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. சாட்டிலைட் உரிமையை ரூ.50 கோடிக்கு சன் டிவி கைப்பற்றியுள்ளது. ஆடியோ வெளியீட்டு உரிமையை T-Series நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதுதவிர, ஹிந்தி டப்பிங் ரூ.32 கோடிக்கும், ஓவர்சீஸ் ரிலீஸ் ரூ.32 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா தியேட்டரிக்கல் உரிமை பேச்சுவார்த்தையில் உள்ளது. அதுவும் உறுதியானால் இப்படம் ரிலீஸிற்கு முன்பே கிட்டதட்ட ரூ.275 கோடி வரை வசூல் செய்யும் என டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE