‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுவா?: விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமன் இசையில் சமீபத்தில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE