கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறப்பு, படப்பிடிப்பு என திரைத்துறை சார்ந்த அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.


தியேட்டர்கள் அனைத்தும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத காரணத்தாலும், அப்படியே திறந்தாலும் பெரிய படங்களுக்கு தான் முதலில் வாய்ப்பு என்கிற பயத்தாலும் சிறு படங்கள் OTT தளத்தை முற்றுகையிட துவங்கியுள்ளன. முதலில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் வெளியானது. மேலும் சில சிறு படங்களை அமேசான் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்துள்ள ‘டேனி’ திரைப்படம் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி இப்படம் நேரடி வெளியீடாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ
👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...