3 -வது திருமணத்தை உறுதி செய்த வனிதா விஜயகுமார்!

0
Vanitha Vijayakumar Third Marriage with Peter Paul

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களான விஜய குமார் – மஞ்சுளா தம்பதியினரின் மகளான நடிகை, தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் தனது திருமணம் குறித்த தகவலை அறிவித்துள்ளார்.

Vanitha Vijayakumar Third Marriage with Peter Paul
Vanitha Vijayakumar

1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படமும் சரி, அதற்கு பின் வந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் திரையுலகிலிருந்து விலகி இருந்தார் வனிதா. 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே அப்பா விஜய குமாருடன் ஏற்பட்ட பிரச்சனை அனைத்தும் ஊரறிந்ததே! பிறகு பிக்பாஸ் நிகச்சியில் கலந்துக்கொண்டு மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்தார் வனிதா, அதுமுடிந்து தற்போது அதே சேனலில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Vanitha Vijayakumar Third Marriage with Peter Paul

இந்நிலையில் வனிதா, பீட்டர் பால் என்பவரை 3 -வது திருமணம் செய்யப்போவதாக தகவகள் வெளியானது, கூடவே இவர்கள் திருமணம் குறித்த பத்திரிக்கை ஒன்றும் இணையத்தில் உலா வரத் துவங்கின. இதுதொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, வனிதா விஜயகுமார் 3-வது திருமணம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார்கள். ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் வனிதா விஜயகுமாருக்குத் திருமணம் நடைபெற வுள்ளது. மேலும், கரோனா அச்சுறுத்தலால் இந்தத் திருமணம் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...