ஆதவ் கண்ணதாசனுடன் இணையும் வாணி போஜன்! | தாழ் திறவா

0
Vani Bhojan Next Film with Aadhav Kannadasan

தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க துவங்கி அதன்மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகியாக மாறியிருப்பவர் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan

இவர் நடிப்பில் முதல் படமாக வெளியாகிய ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெறவே, அடுத்தடுத்து படங்கள் என பிசியாக மாறியுள்ளார் வாணி போஜன். தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா தயாரிக்கும் 2 படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் ‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கவுள்ள இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். 80 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டது என படக்குழுவினர் கூறியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

Vani Bhojan Next Film with Aadhav Kannadasan
Thazh Thiravaa Movie First Look

 

‘Article 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி & அருண்ராஜா காமராஜ்

OTT-ல் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...