வலிமை திரைப்பட விமர்சனம் | Valimai Movie Review and Rating

0
Valimai Movie Review and Rating
Valimai Movie Review and Rating

வலிமை திரைப்பட விமர்சனம் – Valimai Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா மற்றும் பலர்.

இசை: பாடல்கள் – யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசை – ஜிப்ரான்

ஒளிப்பதிவு: நிரவ்ஷா

எடிட்டிங்: விஜய் வேலுகுட்டி

தயாரிப்பு: போனி கபூர்

இயக்கம்: H.வினோத்

ரிலீஸ் தேதி: பிப்ரவரி 24, 2022.

Valimai Movie Review and Rating
Valimai Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

ஐபிஎஸ் அதிகாரியாக வரும் கதையின் நாயகன் அஜித், சென்னையில் பைக் கும்பல் ஒன்று செயின் பறிப்பு, கொடூர கொலை தொடர்ந்து மக்களுக்கு இடையூறுகளை செய்து வருகிறது. இதனை தடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. யார் இந்த கும்பல்? இந்த அழிக்க அஜித் எடுத்த முயற்சிகள் என்ன? இறுதியாக எடுத்த வேலையை முடித்தாரா? என்கிற சுவாரஸ்யமே முழுக்கதை.

Valimai Movie Review and Rating
Valimai Movie Review and Rating

FC விமர்சனம்:

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பல்வேறு தடைகளை கடந்து இன்று உலகமுழுக்க வெளியாகியுள்ளது வலிமை. ரசிகர்களின் இவ்வளவு எதிர்ப் பார்ப்புகளையும் வலிமை திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். முதலில் நடிகர்கள் அஜித் குமார், செம எனர்ஜி, பைக் சீன்ஸ், சண்டைக் காட்சிகள், எமோஷனல் என அனைத்திலும் ரசிக்க வைத்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா, செயற்கையான வசனக் காட்சிகள், சில ஓவர் பில்டப் எல்லாம் இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். நாயகி ஹுமா குரேஷி மிரட்டலான கதாப்பாத்திரம் அதிலும் அந்த ஆக்ஷன் சீன் ‘பக்கா மாஸ்’. இவர்களை தொடர்ந்து மற்ற பாத்திரங்களும் தங்களது சிறப்பை கொடுத்துள்ளனர்.

Valimai Movie Review and Rating
Valimai Movie Review and Rating

இப்படத்தின் முதுகெலும்பு என்னவென்றால் ஆக்ஷன் காட்சிகள், அதிலும் பைக்கை வைத்து இவர்கள் செய்துள்ள சம்பவம் தியேட்டரே அதிர வைத்துள்ளது. உண்மையிலேயே உள்ளம் நெகிழ்ந்த பாராட்டுக்கள் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மற்றும் நடித்த அனைத்து ஸ்டண்ட் கலைங்கர்கள். டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ், பெரும்பாலான இடங்களில் இவரது ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. அதேபோல் படத்தின் சவுன்ட் எஃபெக்ட்ஸும்… எடிட்டிங்கை பொறுத்தவரை அக்ஷன் எல்லாம் அதகளம் என்றாலும் இந்த படத்தின் இரண்டாம் பாதியை கொஞ்சம் சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம். படத்தின் இன்னொரு பெரிய பலம் தெரிக்கவிடும் வசனங்கள், அதை அஜித் பேசும் மாடுலேஷன் செம, அதேபோல் சில சமூக பொறுப்புள்ள வசனங்களை ஆங்காங்கே சுவற்றில் வைத்து குறியீடாக காட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் பாடல்கள் ஓகே என்றாலும் பின்னணி இசை எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்றாலும், சொதப்பவில்லை. 

இவ்வளவு நிறைகள் இருந்தாலும் படத்தில் என்ன பிரச்சனை என்றால்? இந்த கதையோ புதுவிதமானதா இல்லை, தமிழிலே ஆயிரம் படங்கள் இந்த கதைக் கொண்டு வந்துள்ளது. என்ன இயக்குனர் புத்திசாலித்தனமாக வழக்கமான பவுடர், ரவுடி கேங் இல்லாமல், இதில் பைக் கேங் என மாற்றியுள்ளார். திரைக்கதையில் சுவாரஸ்யம் இருக்க என்றால் அதுவும் பெரிதாக இல்லை. மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை இடையில் வைத்து காட்சிளை நகர்த்தியுள்ளனர். முதல் பாதி இருந்த அளவிற்கு கூட இரண்டாம் பாதியில்லை. ஹீரோ அஜித்தின் கதாப்பாத்திரம் எந்தளவு பவர்ஃபுல்லாக இருக்கிறதோ அதில் கால்வாசி கூட வில்லன் பாத்திரம் தெரியவில்லை. இதுவே பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. இறுதியாக படம் எப்படி இருக்கு? என்றால் ஆக்ஷன் காட்சிகளை விரும்புவர்களுக்கு இந்த படம் விருந்து, மற்றபடி ஏமாற்றம்தான்.

(பாராட்டுக்கள்: அஜித், ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள்)

  Valimai Movie FC Rating: 3 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்