அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்து போனி கபூர் கூறிய தகவல்!

0
Valimai Movie Latest Update

தல அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

Valimai Movie Latest Update
Thala Ajith

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்த கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது திரைப்படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா பாதிப்பால் மொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், படத்தின் வெளியீடு தீபாவளியிலிருந்து தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும், போனி கபூர் தற்போது கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவி வரும் OTT சூழ்நிலையில் பெரிய படங்களுக்கும் வலைவிரிக்க துவங்கியுள்ளது டிஜிட்டல் தளங்கள்.  

 

Valimai Movie Latest Update
Boney Kapoor

இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனிகபூர் இதுக்குறித்து கூறியுள்ளதாவது, “அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள், திரையரங்கு அனுபவம் தரக்கூடிய படங்கள் அனைத்தும் திரையரங்குகளிலேயே வெளியாக வேண்டும் என எண்ணுகிறேன். நான் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார். இதன்படி வலிமை OTTயில் வெளியாகாது என உறுதிப்படுத்தியுள்ளார்.    

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...