‘வலிமை’ படத்தின் மியூசிக் ப்ரோமோ இன்று வெளியீடு?

0
Valimai Movie Ajith Kumar's Salary
Valimai Movie Ajith Kumar's Salary

நடிகர் அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நீண்ட கால ப்ரொஜெக்ட்டாக மாறிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் இப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை ‘வலிமை’ படத்திலிருந்து சிறிய மியூசிக்கல் தீம்/ ப்ரோமோ ஒன்று வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த வலிமை திரைப்படம் வரும் பொங்கல் அன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Valimai Movie Latest Musical Promo Release
Valimai Movie Latest Musical Promo Release

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்