வலிமை படத்தை வெளியிடும் பிரபல பைனான்சியர்! ரிலீஸ் தேதி

0
Valimai Movie Exact Release Date is Here
Valimai Movie Trailer Release

அஜித்குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில், தேதியை வெளியிடவில்லை.

Valimai Movie Exact Release Date is Here
Valimai Movie Exact Release Date is Here

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வலிமை திரைப்படமானது பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி 12 (2022)-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில், பிரபல பைனான்சியர் அன்பு செழியன் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார், பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்