1000 திரையரங்குகளில் அஜித் குமாரின் ‘வலிமை’!

0
Valimai Grand Release in 1000 Screens
Valimai Grand Release in 1000 Screens

நடிகர் அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை, போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நீண்ட கால ப்ரொஜெக்ட்டாக மாறிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் இப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Valimai Movie HD Stills
Valimai Movie HD Stills

பொங்கல் அன்று வெளியாவதாக இருந்தது, ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போனது.இதை தொடர்ந்து வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரிலீஸ் குறித்த வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, சுமார் 1000 திரையரங்குகளில் வலிமை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்