தள்ளிப் போகும் தனுஷின் ‘வாத்தி’ திரைப்பட ரிலீஸ் தேதி: நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடிதுள்ள திரைப்படம் வாத்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE