‘உசுர உருவி’ பாடல் வரிகள்| Usura Uruvi Song Lyrics in Tamil – Lover

7
Usura Uruvi Song Lyrics in Tamil
Usura Uruvi Song Lyrics in Tamil

‘உசுர உருவி’ பாடல் வரிகள்| Usura Uruvi Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: உசுர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசுர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே…

ஆண்: கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே…

ஆண்: இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா என் உறவா…

ஆண்: உசுர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே…

ஆண்: குழியில விழுகுறேன் தரையவும் காணல
முடிவெதும் வரலயே என்ன செய்வேனா
மூடுன கதவயும் உடச்சி நான் பாக்குறேன்
வழியெதும் வரலியே எங்க போவேனோ…

ஆண்: நடந்ததும் புரியல
நடப்பதும் புடிக்கல
எனக்குள்ள உடையுறேன் நான்…

ஆண்: வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து
தனிமையில் திணறுறேன் நான்…

ஆண்: இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா…

ஆண்: ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா என் உறவா…

ஆண்: உசுர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசுர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே…

ஆண்: கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே….

பாடல் விவரம்:

திரைப்படம்: லவ்வர்

இசை: ஷான் ரோல்டன்

பாடியவர்கள்: சந்தோஷ் நாராயணன்

பாடலாசியர்: மோகன் ராஜன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…