மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வானது நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இதனால் மாணவ, மாணவியர் ஒருபக்கம் தயாராகி வந்தாலும், தோல்வியடைந்து விடுவோமோ என்கிற அச்சத்தினாலும், தான் ஆசைப்பட்ட மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தாலும் விபரீத முடிவை நோக்கி நகர்கின்றனர்.


மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இந்த நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழகத்தில் மீண்டுமொரு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. இதுக்குறித்து கண்டனங்களும், விவாதங்களும் நடந்து கொண்டிருக்கும் போதே, தர்மரி மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (20) என்ற மாணவரும் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதித்யாவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அடுத்தடுத்து மாணவ மரணங்கள் தமிழக மக்களிடையே வருத்தத்தையும், அதிர்ச்சியையும் உண்டாகியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...