இந்திய போர் ஹெலிகாப்டர் மற்றும் ரபேல் போர் விமானத்துக்கு பெண் விமானிகள் | குவியும் பாராட்டுக்கள்

0
Two Indian Navy women officers to operate helicopters from Indian Navy warships

இந்திய கடற்படையில் துணை லெஃப்டிணன்டாக பணியாற்றும் குமுதினி தியாகி, ரிதி சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகளும், அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக போர் கப்பல் பணியில் பணியாற்றவுள்ளனர். இவர்கள் இந்திய கடற்படை கப்பலான “ஐஎன்எஸ் கருடா” போர்தளவாடத்தின் அங்கமான ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் அணி பார்வையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரும், எதிரி இலக்கின் தூரத்தை கண்டறிவது, அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள தயார்படுத்தப்படுவார்கள் என்று கடற்படை கூறியுள்ளது.

Two Indian Navy women officers to operate helicopters from Indian Navy warships
Two Indian Navy women officers to operate helicopters from Indian Navy warships

‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!

இந்திய கடற்படையில் பெண்கள் போர் தளவாட ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவிருப்பது கடற்படைக்கு வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தருணத்திற்கு இந்தியா முழுவதும் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதேபோல், இந்திய விமானப் படையில் அண்மையில் இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானத்தை பெண் விமானி இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் முதல் தொகுதியாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தன. அவை அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.

Two Indian Navy women officers to operate helicopters from Indian Navy warships
Two Indian Navy women officers to operate helicopters from Indian Navy warships
இப்படை பிரிவில் ஒரு பெண் விமானி இணையவிருப்பதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மிக் 21 ரக போர் விமானத்தை இயக்கி வரும் அந்த விமானி, ரஃபேலை இயக்குவதற்காகத்  தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானப் படையின் தாக்குதல் விமானங்களில் தேவையின் அடிப்படையில் பெண் போர் விமானிகள் சேர்க்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், ரஃபேல் போர் விமானத்தைப் பெண் விமானி இயக்க இருப்பதாகத்  தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உச்சத்தை நெருங்கி வருகிறார்கள் என்பது பெருமைக்குரியது.

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...