‘தளபதி 68’ படத்தில் இரண்டு கதாநாயகிகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்:
லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் கதாநாயகிகள் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.


இப்படத்தில் விஜய் ரெண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதால் ஜோதிகா, பிரியங்கா மோகன் இரு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகே வெளியாகுமென படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண