ஜோடி படத்தில் சிறிய வேடம் தான் என்றாலும், மௌனம் பேசியதே படம்தான் திரிஷாவின் ஹீரோயின் என்ட்ரி. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.


தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது முதன்மை கதாப்பாத்திரப் படங்களில் ஆர்வம்காட்டி நடித்து வருகிறார் திரிஷா, அந்த வகையில் பரமபத விளையாட்டு, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுடன் ‘ராம்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு எந்தவித படப்பிடிப்புகளும் இல்லாத காரணத்தால் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் சமீத்தில் தனது டிக்டாக் பக்கத்தில் வெளியான திரிஷாவின் நடன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ:
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...