5வது முறையாக அஜித்திற்கு ஜோடியாகும் த்ரிஷா:
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளர்.


இந்த வாரம் புனேவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜி படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் த்ரிஷா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…