தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவரது திரைப் பயணத்தில் முக்கியமான, அதேநேரம் ரசிகர்கள் மத்தியில் காலம் கடந்து நிற்கும் படங்களில் கில்லி & 96 படங்கள் முக்கியமானவை. கில்லி தனலட்சுமி மற்றும் 96 ஜானு ஆகிய கதாப்பாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கில்லி மற்றும் 96 படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை ஒன்றாக சேர்த்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. இரண்டு வீடியோவில் வரும் சில காட்சிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே உள்ளது. அந்த காட்சிகளை தற்போது ஒன்றாக சேர்த்து 2 இன் 1 தலைப்பு வைத்து அந்த வீடியோ காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பார்கிர்ந்துள்ளார் திரிஷா. மேலும், தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Twitter Video:
2 in 1 🔥😋 pic.twitter.com/wagfglHhPZ
— Trish (@trishtrashers) October 15, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...