மரங்களை நட்டு இயற்கையை பாதுக்கக்கும் விதமாக திரையுலகம் சார்பில் கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் தளபதி விஜய் சமீபத்தில், மகேஷ் பாபுவின் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தன்னுடைய வீட்டில் செடிகளை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார் அது இந்திய அளவில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டார்.


அவர் நட்டது மட்டுமில்லாமல் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு விடுத்த்திருந்தார். அதில் நடிகை திரிஷா, அவருடைய சமூக வலைதள பக்கத்தில். பிரகாஷ்ராஜின் இந்த சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தன்னை நாமினேட் செய்ததற்கு பிரகாஷ்ராஜுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது சேலஞ்சை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் திரிஷா. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...