‘AK 62’ படத்தில் நயன்தாராவுக்கு பதில் இவரா? வெளியான சுவாரஸ்ய தகவல்: துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்த ஆண்டு துவங்கவுள்ள இப்படத்தில் அப்டேட்டுகள் வரத் துவங்கியுள்ளது. அதன்படி, முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ‘AK 62’ படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா ஒப்பந்தாமாகியுள்ளார். ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்கிறார் திரிஷா. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. (விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ படத்தின் கதாநாயகியும் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது).
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE