ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த த்ரிஷா! சிறிய இடைவெளி தேவை

0
Trisha Decided to Left from Social Media

ஜோடி படத்தில் சிறிய வேடம் தான் என்றாலும், மௌனம் பேசியதே படம்தான் திரிஷாவின் ஹீரோயின் என்ட்ரி. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Trisha Decided to Left from Social Media
Trisha Krishnan

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது முதன்மை கதாப்பாத்திரப் படங்களில் ஆர்வம்காட்டி நடித்து வருகிறார் திரிஷா, அந்த வகையில் பரமபத விளையாட்டு, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுடன் ‘ராம்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு எந்தவித படப்பிடிப்புகளும் இல்லாத காரணத்தால் நடிகைகள் பலரும் சமூக வலைத் தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல. இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார், சமீபத்தில் டிக்டாக்கிலும் என்ட்ரியாகி நடன வீடியோக்களை ஷேர் செய்துவந்தார். 

Trisha Decided to Left from Social Media
Trisha at Yennai Arindhaal

இந்நிலையில் தற்போது திரிஷா, சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி த்ரிஷா ரசிகர்களுக்கு சிறிது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Twitter Feed:

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...