திரிஷா பிறந்தநாள் பரிசாக புதிய ஸ்டில்லை வெளியிட்ட ‘லியோ’ படக்குழு: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’. செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிபதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடிகை திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய், திரிஷா நிற்கும் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக்…


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…