போர் கால அடிப்படையில் சீரமைப்பு! ஓடிசாவில் மீண்டும் துவங்கிய ரயில் சேவை

0
Train service resumed in Odisha
Train service resumed in Odisha

 

ஓடிசாவில் மீண்டும் துவங்கிய ரயில் சேவை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் வரலாறு காணத வகையில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்த இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் விபத்து நடந்த இடத்தில போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு மீண்டும் அந்த பாதையில் ரயில் சேவை துவங்கியது. சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.

சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0