இன்றைய முக்கிய செய்திகள்(சில வரிகளில்) – 23.7.23
காலை 11.15AM
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
——————————————————————————————————
காலை 10.45AM
மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு


கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் நாட்டில் பயிற்சிகளை மேற்கொள்ள மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வீரர், வீராங்கனைகளுக்கு உயர்தர பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண