‘திருச்சிற்றம்பலம்’ திரைப்பட விமர்சனம் | Thiruchitrambalam Movie Review and Rating

0
Thiruchitrambalam Movie Review and Rating
Thiruchitrambalam Movie Review and Rating

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்பட விமர்சனம் | Thiruchitrambalam Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

எடிட்டிங்: பிரசன்னா GK

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இயக்கம்: மித்ரன் ஜவகர்.

Thiruchitrambalam Movie Review and Rating
Thiruchitrambalam Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

உணவு டெலிவரி செய்யும் நடுத்தர குடும்பத்து இளைங்கனாக வரும் கதையின் நாயகன் தனுஷ், அவரின் போக்கை சுத்தமாக வெறுக்கும் அப்பா பிரகாஷ்ராஜ், ஒரு தோழனாக தனுஷுக்கு சப்போர்ட் செய்யும் தாத்தா பாரதிராஜா, பக்கத்து வீட்டு பெண்ணாக, சிறுவயது முதல் தனுஷின் சிறந்த தோழியாக வரும் நித்யா மேனன், இரு வேறு காலத்தில் தனுஷிற்கு வரும் காதல் (ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர்) இவர்களுடன் நாயகன் தனுஷின் வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது? என்கிற அழகான வாழ்வியலே இந்த திருச்சிற்றம்பலம்.

Thiruchitrambalam Movie Review and Rating
Thiruchitrambalam Movie Review and Rating

FC விமர்சனம்:

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என தனுஷை வைத்து மூன்று படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் மீண்டும் தனுஷுடன் இணைந்து கொடுத்துள்ள இந்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை தனுஷ் யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி படங்கள் போன்று பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வில் படமுழுக்க சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு போட்டியாக நித்யா மேனன் ‘ப்பா’ என்ன பொண்ணுயா? என கேட்க தோன்றும் அளவிற்கு அவ்வளவு அழகு, தோழியாக அவர் செய்யும் குறும்புத்தனம், நண்பனுக்காக கூட நிற்பது என நெகிழ வைத்துள்ளார். கண்டிப்பான அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ், தாத்தாவாக வரும் பாரதிராஜா இருவருமே கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அதேபோல் பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா மனதில் நிற்கின்றனர்.

டெக்கினிக்கல் டீமை பொறுத்தவரை அனிருத்தின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை இரைச்சல் இல்லாமல் மயிலிறகாக வருடி செல்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், பிரசன்னா GKவின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். தனுஷ் ஒரு முன்னணி நடிகர், அவருக்கென இருக்கும் மாஸ் ஆடியன்ஸ், பிசினஸ் இப்படி ஒருபக்கம் இருக்க, இதெல்லாம் எங்கயுமே கருத்தில் கொள்ளாமல் ஒரு மிடில்கிளாஸ் பையன் அவனுக்குள் இருக்கும் ஆசைகள், காதல், வெற்றி, தோல்வி, சிரிப்பு, அழுகை என எந்த இடத்திலும் மசாலாத்தனத்தை அதிகப்படுத்தாமல் யதார்த்தமாக படமாகியுள்ளார் மித்ரன். இதுக்கே பெரிய வாழ்த்துக்கள் சொல்லணும். அதேபோல் இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் ஆகியவை கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது.

Thiruchitrambalam Movie Review and Rating

இப்படத்தின் குறையாக தெரிவது, முதல் பாதி 90s கிட்சை கவரும் விதமாக சுவாரஸ்யத்துடன் படம் செல்கிறது, ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் அந்தளவிற்கான சுவாரஸ்யம் இல்லை, கொஞ்சம் லேக்கிங் இருக்கத்தான் செய்கிறது. இப்படத்தில் வரும் சில கதாப்பாத்திரங்கள் தேவையா என்பது போல் ஒரு உணர்வு. என்னதான் யதார்த்தமான திரைக்கதையாக இருந்தாலும், இதிலும் சில லாஜிக் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக செலவுக்கே காசில்லாமல் உணவு டெலிவரி செய்து வரும் நாயகன், நாயகி வெளிநாடு சென்றவுடன், பிறகு உடனே இவரும் செல்கிறார், இதெல்லாம் சற்று நம்பகத்தன்மை இல்லாமல் செல்கிறது. இறுதியாக படம் எப்படி என்றால்? எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இப்படம் உங்களை கவர வாய்ப்புள்ளது, முக்கியமாக 90s கிட்ஸ். சில குறைகளை பொறுத்துக்கொண்டால் நல்லதொரு ஃபீல் குட் படம் தான் இந்த திருச்சிற்றம்பலம்.

Thiruchitrambalam Movie Film Crazy Media Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE