‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் இவ்வளவா?

0
Thiruchitrambalam Movie Box Office Report
Thiruchitrambalam Movie Box Office Report

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் இவ்வளவா?: நடிகர் தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Thiruchitrambalam Movie Box Office Report
Thiruchitrambalam Movie Box Office Report

இப்படம் வெளியான நாள்முதலே நல்ல விமர்சனங்கள் கிடைக்க துவங்கின, இதனால் அடுத்தடுத்த நாட்கள் வசூல் அதிகரிக்க துவங்கியது. இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களில் உலகமுழுவதும் சுமார் ரூ.55 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.35 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE