கீர்த்தி சுரேஷ் படத்தை DPயாக வைத்து ரூ.40 லட்சம் சுருட்டிய பெண்: கர்நாடகா, ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை கொஞ்சம் எடிட் செய்து DPயாக வைத்து வலை வீசியுள்ளார். இந்த வலையில் அதே மாநிலத்தை சேர்ந்த பரசுராமா என்பவர் விழுந்துள்ளார்.
சிறிய சேட்டிங்கில் துவங்கிய இவர்களது நட்பு பிறகு காதலாக மாற, மஞ்சுளா ஆசை வார்த்தை கூறியதை கேட்டு காதல் வலையில் சிக்கிய பரசுராமா அவர் கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பி வைத்துள்ளார். அடுத்தகட்டமாக இதே ஆசை வார்த்தையில் அந்த நபர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை கேட்டு வாங்கியுள்ளார். காதல் போதையில் இவரும் கொடுக்க, மிரட்டல் துவங்கியுள்ளது.

அந்த நிர்வாண வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்ய துவங்கிய மஞ்சுளா தொடர்ந்து இதனை காட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒருக்கட்டதில் பொறுமை இழந்த பரசு, போலீசில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் மஞ்சுளாவை கைது செய்து பார்த்தபின்பு தான் அதிர்ச்சி, அந்த மஞ்சுளாவிற்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள். மேலும் கணவரின் ஒத்துழைப்பில் தான் இது நாடகம் அரங்கேறியுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
மஞ்சுளாவை கைது செய்த போலீசார், தலைமறைவான கணவனை தேடி வருகின்றனர். பரசுராமாவிடம் இருந்து அபேஸ் பண்ணிய ரூ.40 லட்சத்தை வைத்து கார், பைக், 100 கிராம் தங்கம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள மஞ்சுளா, வீடு கட்டும் பணிகளையும் மேற்கொண்டு வந்தது விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. என்னத்த சொல்ல…
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…