தனது உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்த பெண்! அதிர்ச்சி தகவல்:
சீனாவில் பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்து எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், வைரம் மற்றும் போதை பொருட்களை வித்தியாசமான முறைகளில் கடத்தி வருவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், அரிய உயிரினங்களை ஆராய்ச்சி மற்றும் பல பயன்பாடுகளுக்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சட்ட விரோதமாக கடத்த சில கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் சீனா – ஹாங்காங் இடையேயான எல்லை பகுதியில் பெண் ஒருவர் எல்லையை கடந்து சென்றுள்ளார். ஆனால் அவரது உடலமைப்பு வழக்கத்தை விட வித்தியாசமாக இருந்ததால் சோதனை அதிகாரிகள் சந்தேகமடைந்து, அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் சாக்ஸில் ஏதோ சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாக்ஸ் பேக்கேஜ்களை எடுத்து பிரித்த போது அதில் சில பாம்புகள் இருந்துள்ளது, இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுக்குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண