‘தி ரோட்’ திரைப்பட விமர்சனம் | The Road Movie Review & Rating

8
The Road Movie Review & Rating
The Road Movie Review & Rating

‘தி ரோட்’ திரைப்பட விமர்சனம் | The Road Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: த்ரிஷா, ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், MS பாஸ்கர் மற்றும் பலர்.

இசை: சாம் CS

ஒளிப்பதிவு: KG வெங்கடேஷ்

எடிட்டிங்: A.R.சிவராஜ்

தயாரிப்பு: AAA Cinemaa Private Limited

இயக்கம்: அருண் வசீகரன்

Trisha's The Road Movie Exclusive Stills
Trisha’s The Road Movie Exclusive Stills

கதைச்சுருக்கம்:

தனது கணவன், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்துவரும் நாயகி த்ரிஷா, இவர்கள் சுற்றுலா செல்லலாம் என முடிவெடுத்து செல்லும் வழியில் பெரும் விபத்துக்குள்ளாகி கணவனும், குழந்தையும் இறந்து விடுகிறார்கள். ஒருக்கட்டதில் இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் த்ரிஷா, அதை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இறுதியாக உண்மையில் நடந்தது என்ன? கொலையாளி யார்? நாயகி அதை கண்டுபிடித்தாரா? என்பதே முழுக்கதை.

FC விமர்சனம்:

த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகி த்ரிஷா, மிக நன்றாகவே நடித்துள்ளார். குடும்பத்தை இழந்து தவிக்கும் எமோஷனல் காட்சிகள், இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். அதேபோலவே ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் அப்பாவி மனிதாக வரும் இவர் ஒருக்கட்டதில் ஏற்படும் சம்பவத்தால் வேறு மாதிரியாக மாறுகிறார். இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனை அழகாக செய்து கொடுத்துள்ளார்.

The Road Movie Review & Rating
The Road Movie Review & Rating

இவர்களை தவிர வரும் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், MS பாஸ்கர் ஆகியோர் நீட்டாகவே தனது பாத்திரங்களை கையாண்டுள்ளனர். சாம் CS இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. KG வெங்கடேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் தொடர் கொலைகள் அதை யார் செய்வது? என சுவாரஸ்யமான கதைக்கருவை தேர்ந்தெடுத்து அதை நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன், அதிலும் இப்படத்தின் இரண்டாம் பாதி ஆழமான டீடெயிலுடன் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

இப்படத்தின் குறையாக தெரிவது, மேற்கூறியது போல இரண்டாம் பாதியில் இருக்கும் அந்த சுவாரஸ்யம் முதல் பாதியில் கொஞ்சம் குறைவு தான். இதனால் முதல் பாதியில் சில இடங்கள் லேகிங்காக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மொத்தமாக பார்த்தால் ஒரு டீசன்ட்டான கிரைம் த்ரில்லர் படமாக தான் இந்த ‘தி ரோட்’ வந்துள்ளது.

“Worth Your Money”

Adult Warning: இரத்தம் தெறிக்கக் கூடிய சில காட்சிகள் வருகிறது.

The Road Movie Film Crazy Rating: 3.5 /5

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0