விவசாயியை எட்டி உதைத்த விவகாரம்! ஆயுதப்படைக்கு மாற்றம்

0
The matter of kicking the farmer! Transition to Armed Forces
The matter of kicking the farmer! Transition to Armed Forces

விவசாயியை எட்டி உதைத்த விவகாரம்! ஆயுதப்படைக்கு மாற்றம்:

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயி அந்த பகுதியில் உள்ள அடிப்பட்டை பிர்சனைகள் குறித்து பேச, அவருக்கும் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் என்பவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுக்குறித்து வழக்கு அம்மையப்பன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தலைமறைவானார் தங்கபாண்டியன். இந்த வழக்கு தொடர்பாக அம்மையப்பனை தாக்கியதாக ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் ராசுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் கிராம சபை கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது மற்றும் விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0