‘தி லெஜெண்ட்’ திரைப்பட விமர்சனம் | The Legend Movie Review & Rating

0
The Legend Movie Review & Rating
The Legend Movie Review & Rating

‘தி லெஜெண்ட்’ திரைப்பட விமர்சனம் | The Legend Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: ‘Legend’ சரவணன், ஊர்வசி ராவ்டேலா, பிரபு, விவேக், சுமன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: ‘Legend’ சரவணன்

இயக்கம்: ஜேடி & ஜெர்ரி.

The Legend Movie Review & Rating
The Legend Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

IIT டாப்பராக, தலைசிறந்த விஞ்ஞானியாக வரும் படத்தின் நாயகன், தனது அதீத விஞ்ஞானத்தை கொண்டு மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற கனவுடன் வருகிறார். ஆனால் வில்லன் சும்மா இருப்பாரா? அப்புறம் என்ன நல்லது செய்ய வந்த நாயகன் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அதை எப்படி கையாண்டு வெற்றிக் கண்டார்? என்பதே கதைச்சுருக்கம்.

The Legend Movie Review & Rating
The Legend Movie Review & Rating

FC விமர்சனம்:

ஜவுளி தொழிலில் மாபெரும் வெற்றி பெற்று தொழிலதிபராக வலம்வந்த ‘லெஜெண்ட்’ அருள் சரவணன் நடிப்பில்  இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்கள் பொறுத்தவரை நாயகன் அருள் சரவணன், முதல் படம் என்பதால் ஆங்காங்கே பல காட்சிகள் பதற்றத்துடனே வந்து சென்றுள்ளார். முகப்பாவனைகள் சுத்தமாக எடுபடவில்லை எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி வந்து செல்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, இவர்களை தவிர வரும் பிரபு, விவேக், ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். அதில் குறையில்லை, ஆனால் எந்தவொரு கதாப்பாத்திரமுமே மனதில் நிற்கவில்லை, வலுவாக இல்லாமல் என்னமோ ஆங்காங்கே தலையை காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

The Legend Movie Review & Rating
The Legend Movie Review & Rating

இப்படத்தின் முதுகெலும்பே டெக்னிக்கல் டீம் தான், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை, வேல் ராஜின் கிராண்ட்டான ஒளிப்பதிவு, ரூபனின் அருமையான எடிட்டிங் மற்றும் சண்டைக் காட்சிகள் இவை அனைத்தும் படமுழுக்க உட்காரவைத்துள்ளது. இப்படத்தின் கதை MGR காலத்திலேயே அடித்து துவைக்கப்பட்ட அருத பழைய கதை. சாரி, கதைதான் இப்படி திரைக்கதையில் மிரட்டியிருப்பார்களோ என்றால்! அது அதைவிட மோசம். சுத்தமாக எங்கேயுமே சுவாரஸ்யம் இல்லை, காரணம் எந்தவொரு காட்சியுமே நம்பும்படி இல்லை. சீரியலை விட மோசமான, கிரிஞ்சான காட்சிகள் எப்படா படம் முடியுமென நினைக்க வைக்கிறது. இறுதியாக ‘தி லெஜண்ட்’ படம் எப்படி என்றால்? மேக்கிங்கில் பணத்தை வாரி இறைத்து செலவு செய்துள்ள இந்த படக்குழு கதை, திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் போட்ட பணத்திற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். சத்திய சோதனை…

The Legend Movie Film Crazy Rating: 1.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE