சிம்புவுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை? STR 48 அப்டேட்: சிலம்பரசன் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படம் சுமார் ரூ.100 கோடி செலவில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் நாள்தோறும் வந்துக் கொண்டிருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் கதாநாயாகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…