கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி இவர்தான்! லேட்டஸ்ட் அப்டேட்:
கார்த்தி அடுத்ததாக சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார்? என்கிற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். பேண்டசி கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…