விக்ரமின் ‘தங்கலான்’ பட லேட்டஸ்ட் வைரல் கிளிக் இதோ:
விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தங்கலான் படபிடிப்பின் நடுவே எடுக்கப்பட்ட விக்ரமின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண