‘தளபதி 67’ படப்பிடிப்பு எப்போது தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்: வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 67 என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ஆம் தேதி மூணாரில் துவங்கவுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் 30 நாட்கள் வரை முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னெவென்றால்! இப்படத்தின் ஒரு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொரு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE