‘தளபதி 67’ பூஜை தேதி & ஷூட்டிங் அப்டேட் இதோ: வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஷால், சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், ‘தளபதி 67’ பூஜை தேதி & ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 5ஆம் தேதி இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சுமார் 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பிறகென்ன இந்த இரண்டு மாதங்கள் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்…
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…