2 ஹீரோயின், 6 வில்லன்கள் மிரட்ட வரும் ‘தளபதி 67’? லேட்டஸ்ட் அப்டேட்

0
Thalapathy 67 Movie Latest Interesting Update
Thalapathy 67 Movie Latest Interesting Update

2 ஹீரோயின், 6 வில்லன்கள் மிரட்ட வரும் ‘தளபதி 67’? லேட்டஸ்ட் அப்டேட்: நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thalapathy 67 Movie Latest Interesting Update
Thalapathy 67 Movie Latest Interesting Update – 2 ஹீரோயின், 6 வில்லன்கள் மிரட்ட வரும் ‘தளபதி 67’? லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். செவன்த் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் தற்போது திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தில் மொத்தம் 6 வில்லன் பாத்திரங்கள் அதில் முக்கிய வில்லன்களாக சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோரிடம் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும், சஞ்சய்தத் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோக இப்படத்தில் 2 கதாநாயகிகளாம், அதில் ஒரு நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், மற்றொரு நாயகி இன்னும் முடிவாகவில்லை. வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்