‘தளபதி 66’ படப்பிடிப்பு இன்று துவக்கம்! ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ்

0
Thalapathy 66 Movie Shooting Starts Today
Thalapathy 66 Movie Shooting Starts Today

‘தளபதி 66’ படப்பிடிப்பு இன்று துவக்கம்: பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார்.

பேமிலி என்டர்டெயின்மென்ட் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு நேற்று உறுதி செய்தது. இவரைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கவுள்ளார். கில்லி, போக்கிரி, ஆதி, வில்லு படங்களைத் தொடர்ந்து விஜய் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 66 Movie Shooting Starts Today
Thalapathy 66 Movie Shooting Starts Today

தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப்ரல் 6) சென்னையில் பூஜையுடன் துவங்கவுள்ளது. இன்றுமுதல் விருவிருப்பாக நடைபெறவுள்ள இப்படம் இந்தாண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகலாம் தயாரிப்பாளர் கூறியுள்ளார். 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்