‘தலைவனே’ பாடல் வரிகள்| Thalaivane Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: தலைவனே எம் தலைவனே
தலைவனே…
ஆண் குழு: சூரா சூரா
படைநடை சூர சூரா
முடிவிலி வீரத்தின் வீரா
நீ ஒன்றல்ல நூறா
வீரா வீரா
தடைஉடை வீரா வீரா
யமதின மானத்தின் கூரா
எம் உயிரின் சாரா
ஆண் குழு: போர் படைப்போர் யாரோ
இந்தப் போரில் வெல்வோரோ யாரோ
போர் முடிப்போர் யாரோ
அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ
ஆண்: தலைவனே எம் தலைவனே
தலைவனே…
குழு: தலைவனே எம் தலைவனே
தலைவனே…
ஆண் குழு: காடே காடே
படையென எதும் இல்லை
தடையென வென்றிடு வீரா
பகை கொன்றிடு வீரா
ஆண் குழு: தீயே உந்தன் துணையென
நீயே உந்தன் இணையென
போரிடு வீரா
விண் ஏறிடு வீரா
ஆண் குழு: ஓ எதிரிகள் முன்னே ஹான்
இந்த வானமே உந்தன் பின்னே
தீப்பிழம்பாய் இரு கண்ணே
நீ எழுகையில் உயருது தாய் மண்ணே
ஆண்: தலைவனே எம் தலைவனே
தலைவனே…
குழு: தலைவனே எம் தலைவனே
தலைவனே….
பாடல் விவரம்:
திரைப்படம்: கங்குவா
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: அரவிந் ஸ்ரீநிவாஸ், தீபக் ப்ளூ, அபர்ணா ஹரிகுமார், சுஷ்மிதா நரசிம்ஹன் மற்றும் பலர்
பாடலாசியர்: மதன் கார்க்கி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…