‘தேன் சுடரே’ பாடல் வரிகள் | Thaensudare Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே
நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்…
பெண்: விடை நான் புரியாமல் தினறுகிறேன்
விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே…
ஆண்: என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
பெண்: உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ
அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே…
ஆண்: காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே
ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய்…
ஆண்: எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய்
எனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய்…
ஆண்: என் உயிரை உண்ணும்
என் உறக்கம் கொல்லும்…
ஆண் & பெண்: என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
பாடல் விவரம்:
திரைப்படம்: லவ்வர்
இசை: ஷான் ரோல்டன்
பாடியவர்கள்: ஷான் ரோல்டன் & சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசியர்: மோகன் ராஜன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…