ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
Terrible earthquake in Australia
Terrible earthquake in Australia

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு: ஆஸ்திரேலியாவின் அருகே பிஜி மற்றும் வானாட்டு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சற்று முன் 7.3 என்ற அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பிஜி, வானாட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…