தெலுங்கில் RX 100 படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா, இப்படத்தைத் தொடர்ந்து ஹிப்பி, 90ML, கேங் லீடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இவர் தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயாவின் பிறந்த நாளை தல ரசிகர்கள் இணையத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதைக்கண்ட கார்த்திகேயா அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறுவதோடு வலிமை குறித்த கருத்தையும் சேர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” என் பிறந்தநாளில் நீங்க காட்டிய அன்பிற்கு மிக்க நன்றி. கடினமாக உழைத்து அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரபோகுது. #Valimai #WaitingForThalaDharisanam என்ன நா சொல்றது…” என கூறியுள்ளார். இதை தற்போது அஜித் ரசிகர்கள் டிரென்டிங் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Special thanks to all #ThalaAjith sir fans for showering so much love on my birthday.I promise to work hard and make us all proud ..
Konjam porumaiya irunga.
Neenga edhir parthadha vida sirapaana oru update vara pogudhu#Valimai #WaitingForThalaDharisanam
Enna Naa Solradhu😎 pic.twitter.com/g5pOcbjnIt— Kartikeya Gummakonda (@ActorKartikeya) September 21, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...