பாலிவுட்டில் நடிகைகள் படவாய்ப்புகளை குவிப்பது இப்படிதான் – தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு

0
Tejaswi Madivada talks about casting couch

தமிழில் ‘நட்பதிகாரம் 79’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

Tejaswi Madivada talks about casting couch
Tejaswi Madivada

இதையடுத்து பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமானார் தேஜஸ்வி, எனினும் திரைப்படம் வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டியொன்றில் “நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் சினிமாவில் தொடர்ந்து நடக்கின்றன. நானும் அதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டேன், இதனால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன். நடிகைகள் பலரும் இதனை எதிர்கொண்டு வருகின்றனர். மும்பை(பாலிவுட்) நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மனரீதியாகவே இதற்கு உடன்பட தயாராகி விடுகிறார்கள். இதனால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன.

Tejaswi Madivada talks about casting couch
Tejaswi Madivada

தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை. நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என கூறி சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...