விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர், துணை முதல்வர்!

0
Tamil Nadu CM and Debuty CM about Vijayakanth

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தாக கூறியுள்ளார். இதுக்குறித்து, “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

தற்போதைய செய்திகள்:-

⮕ தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்!

⮕ கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார்!

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...