எனது வருங்கால கணவன் இவர் தான் – தமன்னாவின் நக்கல் ரிப்ளை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்த தமன்னா, தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களின் படங்களில் கவர்ச்சி பாட்டுக்கு நடனம் ஆட துவங்கியுள்ளார்.
எனினும் இவர் நடிப்பில் வெளிவந்த சமீபத்திய ஹிந்தி படங்கள் பெரிதளவு சொதப்பியதால் தற்போது மார்க்கெட் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. இதுஒருபுறம் பிரபல மும்பை தொழிலதிபரை மணக்கவுள்ளதாக இணையத்திலும், மீடியாவில் செய்திகள் பரவ, ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூற துவங்கினர். இந்நிலையில் இப்படியொரு பொய்யான செய்தியை மீடியாவும் வெளியிடுவதா என கடுப்பான தமன்னா, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் ஆண் வேடத்தில் உள்ள வீடியோவை வெளியிட்டு இவர்தான் எனது வருங்கால தொழிலதிபர் கணவர் என குறிப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமன்னாவின் இந்த நய்யாண்டி பதில் தற்போது இணையத்தின் டாக் ஆஃப் தி டாபிக்…

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE