தமன்னாவிற்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு!

0
Tamannaah's Latest Bollywood Movie
Tamannaah's Latest Bollywood Movie

தமன்னாவிற்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு: தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா, சமீப காலமாக வெறும் ஐட்டம் பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா, தற்போது அவர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு கிளாமராக ஆடி வருகிறார். அதற்கு காரணம் தமன்னா நடித்த கடைசி சில படங்கள் பெரிது ஹிட் ஆகாததே காரணம்.

Tamannaah's Latest Bollywood Movie
Tamannaah’s Latest Bollywood Movie

அதிலும் ஹிந்தியில் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகியாக வெற்றியடைய வேண்டுமென்கிற நோக்கில் இருந்த தமன்னாவிற்கு கடைசி வாய்ப்பாக கிடைத்துள்ளது ஒரு ஹிந்தி படம். பிரபல இயக்குனர் மதுர் பண்டார்கர் இயக்கும் படமொன்றில் நடித்துள்ளார் தமன்னா, இந்த படத்தில் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், இப்படம் வெற்றிப் பெற்றால் மீண்டும் பெரிய படங்களில் நாயகியாக வலம்வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் சில படங்களில் தமன்னா ஒப்பந்தமாகியிருந்தாலும் அது எல்லாம் முக்கிய பாத்திரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்