‘டாணாக்காரன்’ திரைப்பட விமர்சனம் | Taanakkaran Movie Review

0
Taanakkaran Movie Review and Rating
Taanakkaran Movie Review and Rating

‘டாணாக்காரன்’ திரைப்பட விமர்சனம் | Taanakkaran Movie Review

படக்குழு:

நடிகர்கள்: விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், MS பாஸ்கர், மதுசுதன் ராவ், போஸ் வெங்கட் மற்றும் பலர்.

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

எடிட்டிங்: பிலோமின் ராஜ்

தயாரிப்பு: பொடென்ஷியல் ஸ்டுடியோஸ்

இயக்கம்: தமிழ்

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

Taanakkaran Movie Review and Rating
Taanakkaran Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கதைப்படி 1998-ல் காலக்கட்டத்தில் படம் நகர்கிறது. திருநெல்வேலியில் இருக்கக்கூடிய ஒரு போலீஸ் அகாடமி, படத்தின் நாயகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் போலீஸ் டிரைனிங்கிற்காக உள்ளே செல்கின்றனர். பலவித போலீஸ் கனவுகளில் உள்ளே செல்லும் இவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன? நாயகன் இதற்கான தீர்வை கண்டுப்பிடித்தாரா? என்பதே கதைச்சுருக்கம்.

Taanakkaran Movie Review and Rating
Taanakkaran Movie Review and Rating

FC விமர்சனம்:

தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கும் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியிருந்தது இந்த டாணாக்காரன். ஆனால் தியேட்டர்களில் வெளியாகாமல் இன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது சற்று ஏமாற்றமே. சரி, இப்படத்தின் விமர்சனத்திற்குள் செல்வோம். நடிகர்கள் பொறுத்தவரை விக்ரம் பிரபுவின் நடிப்பிற்கு சொல்லிக்கொள்ளும் படமாக இப்படம் அமைந்துள்ளது. சரியான கதாப்பாத்திரம் அதை நேர்த்தியாகவே நடித்து கொடுத்துள்ளார். நாயகி அஞ்சலி நாயர் யதார்த்த அழகில் நம்மை கவர்கிறார், ஆனால் இவரது கதாப்பாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வெய்ட் கொடுத்திருக்கலாம். டெரர் வில்லனாக வரும் லால் வரும் காட்சிகள் உண்மையில் நமக்கே பயமாக இருக்கும், என்னென்ன பண்ண போறானோ? என்று அவ்வளவு முக்கிய பத்திரம் அதை அசால்ட்டாகவே செய்து கொடுத்துள்ளார். MS பாஸ்கர் துவங்கி மற்ற அனைத்து பாத்திரங்களுமே குறையில்லாமல் போட்டிபோட்டு நடித்துள்ளனர்.

படத்தின் பலமாக அமைந்துள்ளது கதைக்களம், பொதுவாக அதிகம் தொடாத, பேசப்படாத கதையை கையிலெடுத்து, அதை நேர்த்தியாக படமாகியுள்ளார் இயக்குனர் தமிழ். அதிலும் பெரிதும் ஈர்த்தது படத்தின் வசனங்கள், “போலீஸ் என்பவன் சமூக மருத்துவன்” என துவங்கி, “இந்த சிஸ்டம் சரியில்லை சிஸ்டம் சரியில்லை என சொல்றோமே, சிஸ்டம்னு ஒன்னே ஒரு முரட்டு வெள்ளைக்காரனுக்கும், முட்டாள் அரசியல் வாதிக்கும் பிறந்த குழந்தை” என இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அருமை, அதிலும் அந்த அகாடமி மைதானத்தில் நடைபெறும் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் ரசிக்குபடி அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் சுவைக்கேற்ப மட்டுமில்லாமல், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை நமக்குள் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

Taanakkaran Movie Review and Rating
Taanakkaran Movie Review and Rating

படத்தின் குறையாக தெரிவது இந்த அகாடமிக்குள் நடக்கும் கொடுமைகளை மக்களுக்குள் கடத்தவேண்டுமென்று டிரைனிங் வந்த நபர்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை மிக அதிகமாக சேர்த்து விட்டார்களோ என்கிற உணர்வு, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! ஒரு சில காட்சிளுடன் நிறுத்தியிருக்கலாம் ஆனால் அடிக்கடி வருவது சற்று சோர்வை தருகிறது. அதேபோல் விறுவிறுப்பாக செல்லும் கதையில் இடையில் தடைக்கல்லாக பாடல்கள், சில கதாநாயகி சம்பத்தப்பட்ட கதைக்கு தேவையில்லாத காட்சிகளை குறைத்திருக்கலாமோ? என்கிற எண்ணனும் வரத்தான் செய்கிறது. ஏனென்றால் கதை அப்படி! இறுதியாக படம் எப்படி? என்றால், தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட வித்தியாசமான கதைக்களத்துடன் படங்கள் வருவது அரிது, எனவே கண்டிப்பாக ஒருமுறை பார்த்து மகிழுங்கள். 

  Taanakkaran Movie FC Rating: 3.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்