ஸ்வீடிஷ் நடிகையுடன் ஜோடி போடும் தனுஷ்! வெளியான தகவல்

0
Swedish Actress ElliAvrRam to play Female lead in Naane Varuven
Swedish Actress ElliAvrRam to play Female lead in Naane Varuven

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் ஸ்வீடிஷ் நடிகை எல்லி அவரம் என்பவருடன் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் அடுத்ததாக தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Swedish Actress ElliAvrRam to play Female lead in Naane Varuven
Swedish Actress ElliAvrRam

அதன்படி, இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஸ்வீடிஷ் நடிகை எல்லி அவரம் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹிந்தியில் மலாங் உள்ளிட்ட சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் மற்றொரு நாயகியாக இந்துஜா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்